
Twitter handle of K.Balakrishnan, CPI(M), CCM. | @TNCPIM | @CpimSpeak
Chennai, India
Joined October 2014
- Tweets3.6K
- Following41
- Followers26.1K
- Likes875
கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan retweeted
சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்கவில்லை என்பதால், நிர்வாக சீர்கேடுகள் களையப்படும் வரை கோவில் நிர்வாகத்தை கவனிக்க இரு நீதிபதிகள் கொண்ட நிர்வாக குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பை வரவேற்று நடராஜர் கோவிலின் கீழ கோபுரம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். இதில் #CPIM மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா, நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்டு பலர் கலந்து கொண்டனர். #CPIMProtest #Chidambaram #NatarajarTemple
கே.பாலகிருஷ்ணன் - K Balakrishnan retweeted
சாதிவாரி கணக்கெடுப்புக்கு #CPIM ஆதரவு! - #CPIM சட்டமன்றக்குழுத் தலைவர் தோழர் ஆர்.செல்லசுவாமி எம்.எல்.ஏ., #TNAssembly
சமூகநீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மையைப் பாதுகாக்கும் அரசியல் போராட்டத்தில் நீண்ட காலமாக உறுதியுடன் செயல்பட்டு வருபவர் திருமாவளவன்.
தமிழ் திரையுலகின் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்கள், இயக்குநர்கள், நடிகர்களில் ஒருவரான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது.
அன்னாரின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருவள்ளூர் மாவட்டத்தில், அம்மோனியா கசிவின் காரணமாக 9 தொழிலாளர்கள் பலியாகினர். பாதிப்படைந்த தொழிலாளர்கள் ராஜீவ் காந்தி மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர்.
அம்மோனியா கசிவால், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி கேட்டு வரும் 25.06.2026 அன்று, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நானும் பங்கேற்கிறேன்.
தமிழ்நாட்டில் NEET Super Speciality (NEET SS) படிப்புகளுக்கான அரசு மருத்துவர்களின் சேவை ஒதுக்கீட்டு இடங்களில் காலியாக உள்ள இடங்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டு நலனுக்கும், உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளின் நோக்கத்திற்கும் முரணானதாக உள்ளது.
எனவே, தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டு, அரசு சேவை மருத்துவர்களுக்கான 50% சேவை ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேண்டும்.






