Kartheee retweeted
#StudentOfTheYearAfterDark - AVPL 🙏
OTT : Jio Hotstar
Tamil Dub : ✅
புந்த மாதிரி ஒரு சீரிஸ், இப்படி ஒரு மட்டமான ரைட்டிங் சத்தியமா பார்க்கல… 😷😷
என்ன சொல்ல வராங்கனு ஒரு எழவும் புரியல 😭😭
Twin sister இறந்து போக, நாயகி அந்த இறப்புக்கான காரணத்தை விசாரிக்க, அடுத்து நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த Student of the Year…
இயக்குநர் English Series -ஐ பார்த்து இந்தத் தொடரை ஒப்பேத்தலாம் முடிவு பண்ணி எடுத்திருக்காரு. ஆனா, ஒண்ணுமே கை கொடுக்கல…
கொஞ்சம் Wednesday, கொஞ்சம் Squid Game கலந்து ஒரு கிண்டு கிண்டியா AVPL தொடர்..
நேர விரயம்!
Kartheee retweeted
சண்டக்காரி – விமர்சனம் 🫙
லண்டன்ல வேலை, காதல், லண்டன்ல பிரச்சனை… இதையெல்லாம் வச்சு ஒரு படம் எடுக்கலாம்னு நினைச்சிருக்காங்க. ஆனா படம் பார்த்த நமக்குத்தான் பிரச்சனை அதிகமாகுது..
படத்தோட கதை என்னன்னா, விசா பிரச்சனையைத் தீர்க்க சொந்த அசிஸ்டன்ட்டையே கல்யாணம் பண்ண முடிவெடுக்கும் ஷ்ரேயாவுக்கு விமல் செய்யும் ரகளை தான் படமே..
ஷ்ரேயா பத்து வருஷதுக்கு முன்னாடி அழகா இருந்துருக்காங்க… விமல் நடிப்பை பத்தி சொல்லவே ஒன்னுமில்ல.
காமெடி வர வேண்டிய இடத்துல சீரியஸா இருக்கு. சீரியஸா இருக்க வேண்டிய இடத்துல காமெடி பண்ண முயற்சி பண்ணியிருக்காங்க.
லண்டன்ல இருந்து கிராமத்துக்கு வந்ததும் கதை வேகம் எடுக்கும்னு பார்த்தா, நம்ம பொறுமைதான் வேகம் எடுத்து ஓடுது..
மொத்தத்துல பழைய கதைக்கு புதுசா பெயர் வச்சு, எந்த நம்பிக்கையில லண்டன் வரைக்கும் ஷூட்டிங் போனாங்கன்னு தெரியல.
#Sandakari படத்தோட சண்டை போட வேண்டாம். நேரத்தை மட்டும் கொஞ்சம் சேமிச்சுக்கோங்க😂
Kartheee retweeted
#TheThirdMurder - Average ⭐️ ⭐️ ✨ (2.25/5)
OTT: Manorama Max
Tamil Dub: ✅
இரண்டு கொலைகள் ஒரே மாதிரியான Pattern-ல் நடக்கிறது. இதை விசாரிக்கக் களமிறங்கும் காவல்துறை, இறுதியில் கொலையாளியைக் கண்டுபிடித்தார்களா? உண்மையில் நடந்தது என்ன? என்பதுதான் படத்தின் கதைக்களம்.
வழக்கமான சேட்டன்ஸ் பாணியிலான Crime Thriller என்றாலும், ரொம்பவே சுமாரான Investigation-ஆக அமைந்திருக்கிறது.
படம் முழுவதும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தவொரு விறுவிறுப்பும் இல்லை.
திரைக்கதையும் பெரிதாக ஈர்க்கவில்லை.
Climax-ம் ஒரு முழுமையான முடிவைக் கொடுக்காமல் அந்தரத்தில் தொங்கவிட்டு இருக்கானுவோ …
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த ஒரே விஷயம், எடுத்த எடுப்பிலேயே கதைக்குள் சென்றுவிட்டதுதான்.
Crime Thriller பிடிக்கும்னா ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்.
ஆனால் பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாம்!
Kartheee retweeted
தாய்ரா (2026) - ரிவ்யூ
நெட்ப்ளிக்ஸ்ல இருக்கு தமிழ் டப் இல்ல.
⭐ ⭐⭐/5
கற்பழிப்பு குற்றவாளிகள் நான்கு பேரை என்கவுண்டர் செய்யுது போலீஸ் துறை. இதை நாடே கொண்டாடும் வேலையில் காவல்துறை சட்டத்தை கையில் எடுத்து விட்டது என்ற புகாரின் பேரில் இது உண்மையிலேயே என்கவுண்டரா இல்ல போலீஸால் திட்டமிடப்பட்ட சம்பவமா என்பதை கண்டுபிடிக்க நேர்மையான அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படுகிறது. இரு அதிகாரிகளின் விசாரணையில் படம் நகர்கிறது.
நல்ல கான்செப்ட்.. சட்டப்படி தீர்வு வெர்சஸ் மக்கள் மற்றும் மீடியா பிரஷரால் கொடுக்கப்படும் உடனடி தீர்வு பற்றி பேசுகிறது படம்..
படம் மெதுவாக ஆரம்பித்து இன்வெஷ்டிகேஷன் போர்ஷன்கள் நல்ல இருந்தது. ஆனால் இரண்டாவது பாதி ரொம்பவே இழுவை..
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் கதாபாத்திரத்தில் ஆர்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பில் பிரித்விராஜ் சிறப்பு..
என்கவுண்டரை விசாரணை செய்யும் நேர்மையான அதிகாரியாக கரினா கபூர், பெண்ணின் அம்மாவாக வருபவர் நன்றாக நடித்து இருக்கிறார்கள்.
இரண்டாவது பாதி படம் மெதுவாக நகர்கிறது.. இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம்..
ஒரு டைம் பார்க்கலாம்..
Kartheee retweeted
#VanishingPoint | Crime Mystery Thriller |Netflix | Tamil Dub🚫| ⭐️⭐️⭐️.75/5
மூன்று வெவ்வேறு சம்பவங்கள் ஒரே புள்ளியில் இணையும் கதை.
Non Linear பாணியில் திரைக்கதை அமைத்த விதம் சிறப்பு👌
இவர் தான் காரணம் தெரிஞ்சிரும், ஆனா எப்படி பண்ணியிருப்பான்கிற அந்த Twist நல்லா இருந்தது.
கொஞ்சம் மெதுவா போனாலும் Engaging ah இருக்கும். Try பண்ணி பாருங்க 🙌
Kartheee retweeted
தி சைல்ட் (2023)
தமிழ் டப்பிங்ல அருமையான கொரியன் ஆக்சன் த்ரில்லர்.. மெதுவாக ஆரம்பித்தாலும்.. படம் எதை நோக்கி போகுது என்பதை சஸ்பென்ஸ்ஸாக வைத்த விதம் 👌
கடைசில ட்விஸ்ட் நல்லா இருந்தது.. சூப்பர் ரைட்டிங்.. கண்டிப்பாக பார்க்கலாம்.
ஜியோ ஹாட்ஸ்டார் தமிழ் டப் ✅
Kartheee retweeted
#Obsession - Now Streaming in Multi Audios in Jio Hotstar🍿
Tamil ✅ - அப்பறம் இது வரை பார்க்காத எல்லாரும் பாத்திருங்க 🙌
There is a Space Live channel on Amazon Prime/ YouTube. It broadcasts a live stream of Earth from International Space Station.
Some nights I put this on and stare at it for hours. Makes me feel tiny and irrelevant as a human, as everyone should. Do try.
youtube.com/live/fO9e9jnhYK8
Kartheee retweeted
#MookuthiAmman2 - Worth 💥
After long enjoyed a lot
Sundar C what a creativity 👌🏻
Vfx are top notch 🤩
Sfx haunted the heart 💥
Nayanthara mam peak performance 🫡
@ReginaCassandra mam as Non Submissive Villi 🤯
@hiphoptamizha na bgms shattered my ear drum 🥵
Best film experience
Kartheee retweeted
Dear sweet @actorvijay uncle & my dear schoolmate’s relative @TheRoute, sending my parents' photos to my DM to intimidate me is just cheap. I’m only voicing my anger, not abusing anyone. Honestly, seeing your IT wing operate like this makes me sorry I wasn't backing the DMK alliance earlier. If a normal, small account scares you guys this much, shut me up with actual good work, not this pathetic behavior.
The ID who sent the pictures: @ajithaamaii. Do your worst.
Kartheee retweeted
Primary issue - safety இல்ல. Queue ல தள்ளிகிட்டு முன்னாடி போறவன கேள்வி கேக்கவே பயமா இருக்கு.
Road ல நெறய one way ல/ wrong side ல வராங்க. Traffic போலீஸ் இல்ல.
I am not exaggerating, நிஜமா family ஐ கூட்டிகிட்டு வெளிய போக பயமா இருக்கு. போலீஸ் மேல நம்பிக்கையே போய்டுச்சு.
TVK கொடி போட்ட வண்டிய பாத்தா பயமும், அருவருப்பும் வருது 🙄
Can we all honestly agree that TN’s quality of life, safety, living conditions, economic development have deteriorated in the last six months? Can people leave aside their prejudices and honestly accept that the present government is fumbling big time? It is Nov 10, exactly six months are over. There needs to be some accountability somewhere.
Kartheee retweeted
ShivFlix - Ramayana Part One(2026) - A Grand & Satisfying Cinematic Experience!
🚨Long Post Detailed Review
ராமாயணம் போன்ற மிகப்பெரிய இதிகாசத்தை இதுவரை சின்னத்திரை தொடர்களாகப் பார்த்திருக்கிறோம். ஏற்கெனவே ஒருமுறை திரைப்படமாக எடுத்து ஏமாற்றிய அனுபவமும் இருக்கிறது. அதனால், இந்தப் படத்தின் அறிவிப்பு வந்தபோதே கொஞ்சம் பயம் இருந்தது. பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல்தான் படத்திற்குச் சென்றேன். ஆனால், 3.15 hours படம் ஓடியதே தெரியவில்லை!
Positives:
ராமாயணத்தின் கதையை ஏற்கெனவே அறிந்தவர்களுக்கு இதில் நிறைய விஷயங்கள் பரிச்சயமாக இருக்கும். மொத்த இதிகாசத்தையும் படமாக எடுக்க வேண்டுமென்றால் 10-20 பாகங்களாவது தேவைப்படும். ஆனால், 2 பாகங்களாக உருவாக்கும்போது எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாகத் தேர்ந்தெடுத்து, முக்கியமான சம்பவங்களை சுவாரசியமான திரைக்கதையாக மாற்றியிருப்பதுதான் படத்தின் மிகப்பெரிய பலம்.
ராவணனின் பின்னணிக்கு சுமார் அரை மணி நேரமும், ராமனின் அறிமுகத்திற்கும் அதேபோன்ற முக்கியத்துவமும் கொடுத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு கதை நகரும் விதமும், அடுத்தடுத்து வரும் சம்பவங்களும் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன.
Performances:
ஆரம்பத்தில் எல்லா கதாபாத்திரங்களின் தேர்வும் எப்படி இருக்குமோ என்ற சிறிய தயக்கம் இருந்தது.
ஆனால், அமைதியும் கம்பீரமும் நிறைந்த ராமன் கதாபாத்திரத்திற்கு Ranbir Kapoor அவ்வளவு பொருத்தம். 👏👏
அதேபோல் சீதையாக Sai Pallavi, ராவணனாக Yash என மூவருமே தங்களுடைய கதாபாத்திரங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்கள்.👍
Technical Departments:
படத்தின் மிகப்பெரிய பலமே அதன் பிரம்மாண்டமான காட்சியமைப்பும் தொழில்நுட்பத் தரமும்தான்.🔥👏
ஏற்கெனவே ராமாயணத்தைப் படித்தவர்களுக்கு மனதில் இருந்த காட்சிகளைத் திரையில், அதுவும் இவ்வளவு பிரம்மாண்டமான விஷுவல்களுடன் பார்ப்பது ஒரு தனி அனுபவம்.
VFX-ல் ஆங்காங்கே சில குறைகள் தெரிந்தாலும், பெரும்பாலான காட்சிகள் பிரம்மாண்டமாகவும் பிரமிக்க வைக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, Green mat-ல் படமாக்கப்பட்ட பல காட்சிகளை நிஜ உலகத்தைப் போன்ற இடங்களாக மாற்றியிருப்பதில் VFX மற்றும் Production Design குழுவின் உழைப்பு தெரிகிறது. Cinematography, VFX, Production Design எனப் பல துறைகளின் ஒருங்கிணைப்பும் இயக்குநரின் Vision-ம் இதில் தெளிவாகத் தெரிகின்றன.👏👏
நான் 3D-யில் பார்த்தேன். 3D அனுபவமும் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, கடைசி பத்து நிமிடங்களில் ஜடாயுவுக்கும் ராவணனுக்கும் இடையே நடக்கும் சண்டை மிக அருமை. அந்தக் காட்சிகளின் Visual Composition மற்றும் Scale உண்மையிலேயே பிரமிக்க வைக்கின்றன.
Cinematography-யும் குறிப்பிட வேண்டிய ஒன்று. ஒவ்வொரு பிரம்மாண்டமான காட்சியையும் அதன் முழு அழகுடன் காட்டியிருக்கிறார்கள். அதேபோல், Background Score குறித்துக் கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், எனக்கு அது திருப்தியாகவே இருந்தது. ஒரு படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஏதாவது ஒரு BGM மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அது இல்லையென்றாலும், கதையின் உணர்வுகளுக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்களுடன் அமைந்திருந்த இசை எனக்குப் பிடித்திருந்தது.👍
Negatives:
இன்னும் சில முக்கியமான காட்சிகளை அழுத்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கலாமோ என்ற எண்ணம் வந்தது. சில இடங்களில் VFX குறைகளும் கண்களில் பட்டன. குறிப்பாக, சில Emotional Moments இன்னும் வலுவாக அமைந்திருந்தால் படத்தின் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும்.
Overall:
பாகுபலி போன்ற படத்தை எதிர்பார்த்து, முழுக்க Action மற்றும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக நினைத்துச் செல்ல வேண்டாம். இதில் நாம் எதிர்பார்ப்பதைவிட Drama மற்றும் கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
மூன்றரை மணி நேரம் படம் பார்த்த பிறகும், இன்னும் மூன்று மணி நேரம் ஓடக்கூடாதா, இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே! என்று தோன்றியது.
குறிப்பாக, ராமாயணத்தை ஏற்கெனவே படித்தவர்களுக்கு இது ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும். மனதில் இருந்த இதிகாசத்தை இவ்வளவு பிரம்மாண்டமாகத் திரையில் பார்ப்பது ஒரு தனி மகிழ்ச்சி.❤️
என்னைப் பொறுத்தவரை, இது ஒரு முழுமையான Theatrical Experience. எதிர்பார்ப்பில்லாமல் சென்ற எனக்கு மிகப்பெரிய திருப்தியைக் கொடுத்த படம்!
Watch it in Big screens for wholesome experience ❤️
Kartheee retweeted
NNN - DAY 08
#RoomInRome (2010) 🔞
தீப ஒளித் திருநாளன்று குதூகலமாக இருக்க அட்டகாசமான படம்…
ஒரு இரவு ரோம் நகர ஹோட்டல் அறையில் சந்திக்கும் இரண்டு பெண்கள், உடல் ஈர்ப்பில் தொடங்கி காதல், ரகசியங்கள், உணர்வுகள் என ஒருவருக்கொருவர் நெருக்கமாகும் கதைக்களம்..
miss பண்ணாம பாருங்க…😉😉😉
NNN- Day 07
#Love (2015) 🔞🔞🔞
படத்தில் அதீத காமத்தை எதிர்பார்க்கும் நபர்களுக்கான படம்…
காதல், காமம், பொறாமை, பிரிவு என ஒரு இளைஞனின் தீவிரமான காதல் வாழ்க்கையையும் கட்டுப்பாடற்ற பாலியல் உறவுகளையும் வெளிப்படையாகச் சொல்லும் படம்..
அப்புறம் என்ன வேட்டை தான்..
Kartheee retweeted
Oru periya request @TamilanParthib1 anna ku
Anna Road la High Beam potu vandi otranga City kulla and Village kulla idhanala travel pandrathu kastama irukku
Basic ah oru overtake eppadi pannanum nu theriyala
Thappana indicator potu vandi otranga
So licence kodukurathukku 👇🏻👇🏻
Kartheee retweeted
#TheDreamers (2003)🔞🔞
படம் எப்படியிருக்கும் சொல்றதைவிட படமா பாருங்க மக்கா! இன்பமாய் இருக்கும் 😌😌
அது என்ன இரண்டு காதலனா கேக்காதீங்க...
ஒன்னு Lover… இன்னொன்று நாயகியின் Twin Brother-ஆம் 🏃🏻♂️➡️🏃🏻♂️➡️
யோசிக்கவே சங்கடமாத்தான் இருக்கு..
NNN விரதம் கடைபிடிப்பவர்கள் இந்தப் பக்கம் வேண்டாம்…
Kartheee retweeted
கமல்ஹாசனைக் கேள்வி கேட்கும் முன், சமூகத்தைப் பற்றிய கேள்விகளை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்!
கமல்ஹாசன் தனது அடுத்த திரைப்படத்திற்கு 'சண்டியர்' என்று பெயர் வைத்ததற்காக அவரைக் குறிவைத்துக் குரைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஒரு கேள்வி!
2003-ஆம் ஆண்டில், 2004-ல் வெளியான விருமாண்டி திரைப்படத்திற்கு முதலில் 'சண்டியர்' என்றுதான் பெயர் சூட்டப்பட்டது. அப்போது புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்புத் தெரிவித்தார். அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்த பிறகு, சமூகப் பதற்றம் ஏற்படக்கூடும் என்ற சூழலைக் கருத்தில் கொண்டு கமல்ஹாசன் அந்தத் தலைப்பை மாற்ற ஒப்புக்கொண்டார். பின்னர் அந்தத் திரைப்படம் 'விருமாண்டி' என்ற பெயரில் வெளியானது.
இப்போது 2026. இருபத்துமூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால் சாதியப் பாகுபாடு தொடர்பான சமூகப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிட்டனவா?
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராகப் பதிவான வன்கொடுமை வழக்குகள்:
2005 – 1,219 வழக்குகள்.
2015 – 1,761 வழக்குகள்.
2020 – 1,297 வழக்குகள்.
2021 – 1,416 வழக்குகள்.
2022 – 1,828 வழக்குகள்.
2023 – 1,969 வழக்குகள்.cvmc.in
2022 டிசம்பரில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்திய குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. 2025 ஜனவரியிலும் அந்த வழக்கின் விசாரணை மற்றும் குற்றப்பத்திரிகை தொடர்பாகப் பெரும் சர்ச்சை தொடர்ந்தது.
India Today+1
இத்தனை ஆண்டுகளுக்குப் '"பிறகும் சாதியப் பாகுபாடு குறித்த பிரச்சினைகள் சமூகத்தில் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில், ஒரு திரைப்படத்தின் தலைப்பை மட்டும் வைத்து அதன் நோக்கத்தையும் உள்ளடக்கத்தையும் முன்கூட்டியே தீர்மானிப்பது எந்த வகையில் நியாயம்?
கமல்ஹாசன் "அன்பே சிவம்" போன்ற திரைப்படங்களையும் கொடுத்திருக்கிறார். அவருடைய படைப்புலகத்தை ஒரு குறிப்பிட்ட திரைப்படத்தின் தலைப்பை மட்டும் வைத்து மதிப்பிட முடியுமா? இன்னும் திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், அவற்றின் சமூகப் பின்னணி, இயக்குநரின் நோக்கம் என எதுவுமே தெரியாத நிலையில், எதற்காக இந்த அவசரமான தீர்ப்புகள்?
ஒரு திரைப்படத்தின் தலைப்பு அதன் முழுமையான கருத்தியலாகிவிடாது. ஒரு படைப்பின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாமல் அதற்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது விமர்சனமல்ல.
2003-இல் ஒரு தலைப்பை மாற்ற வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டது. 2026-இலும் அதே மனநிலையில்தான் நாம் இருக்க வேண்டுமா? இருபத்துமூன்று ஆண்டுகளில் மாறியிருக்க வேண்டியது ஒரு திரைப்படத்தின் தலைப்பு மட்டும்தானா? அல்லது சமூகத்தின் சிந்தனையும் முதிர்ச்சியடைந்திருக்க வேண்டுமா?
கமல்ஹாசனுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன்பு, ஒரு படைப்பை அதன் முழுமையான உள்ளடக்கத்தின் அடிப்படையில் அணுகும் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
திரைப்படத்தைப் பார்க்காமல் தீர்ப்பளிக்காதீர்கள். கதாபாத்திரங்களைப் புரிந்துகொள்ளாமல் இயக்குநரின் நோக்கத்தைத் தீர்மானிக்காதீர்கள்.
சமூகப் பிரச்சினைகள் மீது உண்மையான அக்கறை இருந்தால், அவற்றைத் தீர்ப்பதற்கான அரசியல், நிர்வாக மற்றும் சமூகப் பொறுப்புகளைப் பற்றிப் பேசுங்கள். ஒரு திரைப்படத்தின் தலைப்பைச் சுற்றியே உங்கள் அரசியலைச் சுருக்கிவிடாதீர்கள்.
கலைஞரின் படைப்புச் சுதந்திரம், சமூகத்தின் விமர்சன உரிமை, இரண்டுமே ஜனநாயகத்தில் முக்கியமானவை. ஆனால் விமர்சனம் என்பது படைப்பைப் புரிந்துகொண்ட பிறகுதான் தொடங்க வேண்டும்! @RKFI @ikamalhaasan
Kartheee retweeted
அகல் விளக்கு பதிப்பகம் திடீரென்று தமிழ் மக்களின் முன்னால் அறிவு விளக்கை ஏற்றி வைத்திருக்கிறது! மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நூல்களைப் பற்றி பேசுகிறார்கள். 'நூல்களைப்' பற்றி பேசவேண்டும் என்பதுதான் என் ஆசை!
கோவை, திருச்சி உள்ளிட்ட சிறப்பு நூலகங்களின் நூல் பரிந்துரை குழுவில் பெருமாள் முருகனைப் போல நானும் உறுப்பினராக இருந்தேன். சுமார் 135 பேர் உறுப்பினர்களாக இருந்து நூல்களைப் பரிந்துரைத்தோம். எல்லாமே வெளிப்படையாக நடந்தன. பரிந்துரைக்கான நூல்கள் கூகுள் ஷீட்டில் அனுப்பப்படும். அதில் பரிந்துரையைக் குறிப்பிட வேண்டும். எல்லாமே இணையத்தில் உள்ளன. எல்லாரும் பார்க்கலாம்.
நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியலில் திரிஷா விஜய் என்பவர் எழுதிய நூல் உட்பட அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்டதாக பெருமாள் முருகன் குறிப்பிட்டிருக்கும் எந்த நூல்களும் வரவில்லை. நான், கடிதம், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய பிரிவுகளில் நூல்களைப் பரிந்துரை செய்தேன். திரிஷா விஜய் நூல் கட்டுரை நூல் என்பதால் என்னிடம் வந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் வரவில்லை.
நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியல் எங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதை நான் வெளியிடவும் தயாராக இருக்கிறேன். என்னைப் போலவே மற்ற பரிந்துரை உறுப்பினர்களுக்கும் அவரவர் பரிந்துரைத்த நூல்களின் பட்டியல் அனுப்பப்பட்டு இருக்கும். எனவே நூல் பரிந்துரை உறுப்பினர்களின் பட்டியலை வாங்கிப் பார்த்தாலேயே அகல் விளக்கு பதிப்பகத்தின் போலி நூல்கள் முன்பே பரிந்துரை செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டனவா என்பது தெரிந்துவிடும்.
பரிந்துரைக்கப்பட்ட நூல்களை அப்படியே வாங்கவும் முடியாது. பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, நூல் தேர்வுக் குழு தேர்வு செய்யும். பின்னர் இறுதி படுத்தப்பட்ட நூல்களை கொள்முதல் குழு விலையை குறைத்துப் பேசி வாங்கும். இதை உயர்நிலைக் குழு கண்காணிக்கும். எனவே தவறு அதிகாரிகள் மட்டத்தில் நடந்திருக்கிறது என்பது தெளிவு.
நூல்களைப் பரிந்துரை செய்த பணிக்காக எங்களுக்கு குறைந்த பட்ச மதிப்பூதியம் இந்த செப்டம்பர் மாதம் தான் வழங்கப்பட்டது. எப்போதுமே அரசு துறைகள் சார்ந்த பணிகளுக்கு நிதி எப்போது விடுவிக்கப் படுகிறதோ அப்போது தான் எல்லாவற்றுக்கும் கணக்கு நேர் செய்யப்படும். ஆனால் அகல் விளக்கு பதிப்பக போலி நூல்களுக்கு மட்டும் நூல் கொள்முதல் அரசாணையைப் போட்ட உடனே எப்படி கொடுத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.
பெரியார் அறிவுலக இறுதிகட்ட பணிகள் கடந்த சில மாதங்களில் தான் நடைபெற்று திறக்கப்பட்டது. எனவே நடந்த முறைகேட்டை AI இல்லாத உண்மையான அரசாணை மற்றும் கடிதங்களின் ஆதாரங்களோடு வெளியிட்டு எல்லாருக்கும் தெளிவு படுத்த வேண்டும். குற்றம் சாட்டிவிட்டு கடந்து போகக் கூடாது. பெருமாள் முருகன் கட்டுரையை அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் பயன்படுத்தாமல், அவர் சொல்வதைப் போல குழு விசாரணை அமைக்க முன்வரவேண்டும்.
பெருமாள் முருகன் குறிப்பிடும் நூலாசிரியர் பெயர்களில் நூல்களை எழுதி வெளியிடும் எண்ணம் கடந்த ஆண்டு இறுதியிலேயே அகல் விளக்கு பதிப்பகத்துக்கு தோன்றியிருக்குமா என்ற எண்ணம் தான் எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குள்ளே எழுகிறது!
-அழகிய பெரியவன்
Kartheee retweeted
#NooruKodiVaanavil - Below Average ⭐️ ⭐️ (2/5)
OTT: Zee5
Language: Tamil
நாயகன் Harish Kalyan, தான் வேலை பார்க்கும் சேனலில் புரமோஷன் வாங்கி பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்.
அதற்காக கோவாவில் இருக்கும் அவர்களின் சேனலை பெரிய அளவில் கொண்டு செல்ல ஒரு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடுகிறார்.
அதற்கு Anchor தேடும்போது, நாயகி Siddhi Idnani சரியான தேர்வாக இருப்பார் என்று நினைத்து அவரை அணுகுகிறார். ஆனால் நாயகி மறுக்க, அதற்குப் பிறகு நடக்கும் Love, Emotional, Drama தான் இந்தப் படம்.
படம் தொடங்கும்போதே இப்படித்தான் கதை நகரும் என்ற ஒரு Guess வந்துவிடுகிறது. நாம் நினைத்தது போலவே எந்தவிதமான திருப்பமும் இல்லாமல் நேர்கோட்டில் பயணித்து முடிகிறது. பார்க்கும் நமக்கும் எந்தவிதமான சுவாரஸ்யத்தையும் கொடுக்கவில்லை.
Harish Kalyan அழகாக இருக்கிறார், Siddhi Idnani Cute-ஆக இருக்கிறார் என்று எவ்வளவு நேரம்தான் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பக் காட்டிக்கொண்டே இருப்பார்கள்? முடியல சாரே!
முதல் ஒரு மணி நேரம் வரை ஓரளவுக்கு ஓகே. அதற்குப் பிறகு AVPL!
இந்தப் படத்தை நேரடியாக OTT-யில் வெளியிடுவதுதான் சரியாக இருக்கும் என்று தயாரிப்பாளர் முடிவு செய்ததாகச் சொன்னார்கள். அது ஏன் என்பதைப் படம் பார்த்த பிறகுதான் புரிந்துகொள்ள முடிகிறது.
siddhi idnani உதடை உரசும் காட்சிகள் சிறிய அளவில் எட்டி பார்க்கும்..
நேர விரயம்

































