தம்பி சூர்யா retweeted
கள்ளக்குறிச்சி எம்எல்ஏவை விட வந்த குறுஞ்செய்தியை மூடி மறைக்கும் ஆட்சியரின் மௌனம்தான் ஆகப்பெரும் வன்முறை.
- வ. கௌதமன்
தமிழ்ல குடமுழுக்கு செய்யணும்னு திமுகவை எதிர்த்து தமிழ்த்தேசிய பேரியக்கம், நாம் தமிழர் கட்சி களத்துல நிக்கும் போது தவெக-காரன் எந்த பொந்துக்குள்ளடா ஆட்டிகிட்டு இருந்தீங்க?
தமிழே படிக்க தெரியாத அமைச்சர வச்சுக்கிட்டு இவனுங்க நமக்கு பாடம் எடுக்குறானுங்க. கோத்தா டேய் கம்முனு போங்கடா!
1
4
51
தம்பி சூர்யா retweeted
மாவீரர் நாள் 2026
வீரவணக்கப் பொதுக்கூட்டம்
வீரவணக்வுரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,நாம் தமிழர் கட்சி
நாள்: (கார்த்திகை 11) 27.11.2026 மாலை 04 மணியளவில்
இடம்: அகஸ்தியர்பட்டி - அம்பாசமுத்திரம்
திருநெல்வேலி மாவட்டம்
நிதி அளிக்க;👇
donate.naamtamilar.org/heroe…
தம்பி சூர்யா retweeted
கர்நாடகாவின் காவிரி திருட்டைத் தடுக்கும் வகையில் நவம்பர் 26 அன்று திருக்காட்டுப்பள்ளியில் கண்டனப் பேரணி!
காவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு
தஞ்சாவூர், நவம்பர் 10:
காவிரி உரிமை மீட்புக் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் 10.11.2026 அன்று தஞ்சையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்குக் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் தலைமை தாங்கினார். குழுவின் பொருளாளர் தா. மணிமொழியன், அள்ளூர் சாமி. கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1
தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் உரிமையை மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், கர்நாடக அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும், இரு அரசுகளின் செயல்பாடுகளைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்க்கும் தமிழ்நாடு அரசையும் அரசியல் கட்சிகளையும் கண்டித்தும், நவம்பர் 26ஆம் தேதி திருக்காட்டுப்பள்ளியில்,
“கர்நாடகாவின் காவிரி திருட்டைத் தடுப்போம்!”
என்ற முழக்கத்துடன் கண்டனப் பேரணி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
தீர்மானம் 2
தமிழ்நாடு வெற்றிக் கழக அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதியின்படி, அனைத்து உழவர்களுக்கும் கூட்டுறவுப் பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
தீர்மானம் 3
பட்டா உள்ளவர்களுக்கு மட்டுமே பயிர்க் காப்பீடு என்ற நிபந்தனையைத் தளர்த்தி, அனைத்து உழவர்களும் சம்பா பருவப் பயிர்க் காப்பீடு செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.
பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்.
கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற்றுத் தராத தமிழ்நாடு அரசு, நிலவும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு பயிர்க் காப்பீட்டுக்கான உழவர்களின் சந்தாத் தொகை முழுவதையும் அரசே ஏற்க வேண்டும்.
தீர்மானம் 4
காவிரி நீர் கிடைக்காததால் ஏற்பட்டுள்ள வேளாண் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35,000 வீதம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
கூட்டத்தில் கலந்து கொண்டோர்:
பொறியாளர் தி. செந்தில்வேலன், மன்னை இராசசேகர் (தமிழர் தேசியக் களம்), நா. வைகறை, பழ. இராசேந்திரன், குடந்தை க. விடுதலைச்சுடர், திருச்சி வே.க. இலக்குவன், மூ.த. கவித்துவன், பூதலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த பி. தென்னவன், க. காமராசு, லெ. இராமசாமி, இராசு. முனியாண்டி, வாசுதேவன் (தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை), இரா. செயக்குமார் (வணிகர் சங்கங்களின் பேரமைப்பு), சுந்தரராசன் (தலைவர், வள்ளலார் பணியகம்) ஆகியோர் கலந்து கொண்டனர். – at Boothipuram, India
தம்பி சூர்யா retweeted
சரக்குக்காக பாரில் உட்கார்ந்து இருந்த ஆளை எல்லாம் துணை சபாநாயகர் ஆக்கினால், பொறுக்கித்தனம் செய்யத்தான் செய்வான்!
தமிழ்நாட்டின் ஒரிஜினல் முதலமைச்சர் இவர் ஒருவரே!
எத்தனை பேர் வந்தாலும், எத்தனை பேர் சென்றாலும், என் பார்வையில் தமிழ்நாட்டின் உண்மையான தலைமைத்துவத்தின் அடையாளம் இவர் ஒருவரே!
#POLITICAL_FORCE_OF_TAMILNADU
தம்பி சூர்யா retweeted
தமிழ்த்தேசிய முழக்கத்தை தமிழர் மயமாக்கிய செந்தமிழன் சீமான் அவர்கட்கு நெஞ்சு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
பெ. மணியரசன்
தலைவர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
உலகத்தமிழர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு நாள் வாழ்த்துகள் !
தமிழ்த்தாய் வாழ்க !
தலைவர் பிரபாகரன் வாழ்க !
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1
போதைப் பொருள் கடத்தும் #தவெக ஆட்சி கும்பலை எதிர்த்து ஆர்ப்பாட்டம் !
மாவட்ட ரீதியாக ஒன்று கூடுவோம்!
தம்பி சூர்யா retweeted
ஒருவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்ய வேண்டுமென்றால் முறையான வாரண்ட் கொடுக்கப்பட வேண்டும்.
அரசியல் தொடர்பான வழக்குகளுக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி, அதிகாலை 5.30 மணிக்கு இரவு நேர உடையிலேயே கைது செய்து, எவ்வித ஆணையும் இல்லாமல் காவல் நிலையத்திற்கு ஒரு பெண்ணை அழைத்துச்செல்ல எந்த சட்டத்தில் இடம் இருக்கிறது?
இது முற்றிலுமாக முறையற்ற செயல், இத்தகைய செயலுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துகொள்கிறோம்.
கொலைகாரர்கள், கொள்ளையடிப்பவன், போதை பொருள் கடத்துகிறவன் அதற்கு துணை போகிறவர்களை கூட, இந்த அரசு இப்படி கைது செய்யவில்லையே.
இது போன்ற தொடர் நடவடிக்கைகள் இது மற்றுமொரு பாயச அரசாகவே காட்சியளிக்கிறது.
காவல்துறை இவங்கள எதுக்கு கைது பண்ணாங்க?
தவெக - காரன் மாதிரி கஞ்சா போதை பொருள் எதாவது கடத்துனாங்கள ?
இல்ல.. 2 மாதத்துக்கு முன்னாடி சென்னையில ரெண்டு பொண்ணுங்க கஞ்சா போதையில போலீஸ்காரன் கூட பாக்காம நடுரோட்ல ஆபாசமான வார்த்தை ஏதாவது பேசினாங்கள ?
டேய் ஜோக்கர் பதில் சொல்ற?@TVKVijayHQ
தம்பி சூர்யா retweeted
தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது கண்டிக்கத்தக்கது: உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் இன்று கோவையில் கைது செய்திருக்கின்றனர். சட்டப்பேரவைத் தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குக்காக அதிகாலை வேளையில் வந்து நாம் தமிழர் வேட்பாளர், அவரது கணவர் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது ஆகும்.
தேர்தல் பரப்புரையின் போது தமது பரப்புரைக்கு அரசு எந்திரம் மூலம் முட்டுக்கட்டைகள் போடப்பட்டதாகக் கூறி நாம் தமிழர் வேட்பாளரும் பிற நிர்வாகிகளும் போராட்டங்களை நடத்தினார்கள். அதற்காக அப்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இப்போது கார்த்திகா உள்ளிட்டோரை கைது செய்திருப்பது தேவையற்றது. உடனடியாக கார்த்திகாவையும், மற்ற நிர்வாகிகளையும் காவல்துறை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். @CMOTamilnadu
தம்பி சூர்யா retweeted
சட்ட நடவடிக்கையா?
திட்டமிட்ட பழிவாங்கலா?
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தங்கை கார்த்திகா அவர்களை, இன்று கோவையில் வைத்து தாராபுரம் காவல்துறையினர் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில், தங்கை கார்த்திகா அவர்களும் நாம் தமிழர் கட்சியினரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதாகவும், அவற்றுக்கு எதிராக அவர்கள் போராடியதாகவும் அன்றைய சம்பவங்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 2 அன்று தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பணிமனை அருகே வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்பட்ட விவகாரத்தில் கட்சியினர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு அடுத்த நாள், தேர்தல் களத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாகக் குற்றம்சாட்டி, தங்கை கார்த்திகா அவர்கள் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் அதிகாரிகள் பாரபட்சமாக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், அக்டோபர் 4 அன்று முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொள்ளவிருந்த பகுதியில் தங்கை கார்த்திகா அவர்களும் நாம் தமிழர் கட்சியினரும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, அந்தப் பகுதியில் பிரச்சாரம் செய்ய காவல்துறையினர் அனுமதி மறுத்ததாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து தங்கை கார்த்திகா அவர்களுடன் மேலும் 5க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
ஒரு வேட்பாளர் தனது தொகுதியில் மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்கு கேட்பதற்கான வாய்ப்பை முழுமையாகப் பெற வேண்டும். ஆனால், தங்கை கார்த்திகா அவர்களின் பிரச்சாரத்திற்கு தொடர்ந்து தடைகள் ஏற்பட்டதாகவும், அந்தத் தடைகள் குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார்கள் அளிக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்களது தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஒரு வேட்பாளரின் பிரச்சாரத்திற்கு தடைகள் ஏற்பட்டதாக புகார் அளிக்கும்போது அதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டிய தேர்தல் நிர்வாகம், அந்தப் புகார்களில் போதிய நடவடிக்கை எடுக்காமல் இருந்ததா? அனைத்து வேட்பாளர்களுக்கும் சமமான தேர்தல் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் வெளிப்படையான பதிலை அளிக்க வேண்டும்.
எனவே, இந்தக் கைது நடவடிக்கை வழக்கமான சட்ட நடவடிக்கையா? அல்லது தேர்தல் காலத்தில் எழுந்த அரசியல் மோதலின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் பழிவாங்கும் நடவடிக்கையா? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். பொதுவாக தேர்தல் காலங்களில் வழக்குகள் பதியப்பட்டால் முறையாக நீதிமன்றத்தின் மூலம் வழக்கு பதியப்பட்டு சம்மன் அனுப்பப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுப்பது வழக்கம். அதுபோல இந்த கைதில் எதுவும் நடந்திருக்கிறதா என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
சட்டப்படி விசாரணை நடத்துவதற்கு எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், சட்டம் அனைவருக்கும் சமமாகவும், பாரபட்சமின்றியும் செயல்பட வேண்டும். அரசியல் எதிர்ப்புக் குரலை ஒடுக்குவதற்கான கருவியாக காவல்துறை அல்லது தேர்தல் நிர்வாகம் பயன்படுத்தப்படக்கூடாது.
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தங்கை கார்த்திகா அவர்களின் கைது நடவடிக்கையைக் கண்டிப்பதுடன், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தி. வேல்முருகன்,
தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி
#கார்த்திகாவை_விடுதலை_செய் #தேர்தல்_நீதி
#ReleaseKarthika #tamil #ElectionJustice
தம்பி சூர்யா retweeted
தனது தாயைத் தவறாகப் பேசிய நயினார் நாகேந்திரன் மீது வழக்குப் போடத் துப்பில்லாத முதல்வர் @TVKVijayHQ , தேர்தல் கால வழக்குக்குக்காக அக்கா கார்த்திகாவைக் கைதுசெய்து இருப்பது பச்சை அயோக்கியத்தனம்!
தம்பி சூர்யா retweeted
அரசியல் பழிவாங்கும் நோக்கோடு பொய் வழக்குப் புனைந்து தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைதுசெய்திருப்பது தவெக அரசின் கீழ்த்தரமான அரசியல்! அதிகாரம் நிலையானதல்ல எந்த ஆட்சியும் நிரந்தரமானதல்ல! இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை!
@CMOTamilnadu @TVKVijayHQ
தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தங்கை கார்த்திகாவையும், அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட 7 நாம் தமிழர் உறவுகளை பொய் வழக்கில் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கைதுசெய்திருக்கும் தவெக அரசின் செயலை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் கால வழக்குக்குக் கைது நடவடிக்கை மேற்கொண்டு சிறைப்படுத்துவது பாசிசத்தின் உச்சம்.
தாராபுரம் இடைத்தேர்தலின் கடைசிநாள் பரப்புரைக்கு நாம் தமிழர் கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதனால் விஜய் சாலைவலம் சென்ற வழியில், தங்கை கார்த்திகா நாம் தமிழர் உறவுகளோடு போராட்டம் நடத்தினார் என்கிற காரணத்திற்காகக் குறிவைத்து, இப்போது கைதுசெய்து பழிவாங்கத் துடிப்பது கீழ்த்தரமான அரசியல் இல்லையா? இந்த இழிவான அரசியலைச் செய்வதற்குத்தான் தூய சக்தி என மேடைதோறும் சுயதம்பட்டம் அடித்தீர்களா முதல்வர் விஜய் அவர்களே?
மாநிலம் முழுமைக்கும் சட்டம் ஒழுங்கும், பொது அமைதியும் மொத்தமாகச் சீர்குலைந்துப் போயிருக்கும் தற்காலச் சூழலில், அவற்றைச் சரிசெய்ய காவல்துறையைப் பயன்படுத்தத் துப்பில்லாத முதல்வர் விஜய், அரசியல் பழிவாங்கலுக்காகப் பொய்யாக வழக்கைப் புனைந்து தங்கை கார்த்திகாவைக் கைதுசெய்வதெல்லாம் மிகக் கேவலமான அரசியல் இல்லையா?
நாகையில் சொந்தக்கட்சி நிர்வாகி 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் போருளைக் கடத்த முற்பட்டபோது, அதனை முன்கூட்டியே கண்டறிந்து கைதுசெய்ய வக்கில்லாத தவெக அரசின் காவல்துறை, ஆளுங்கட்சியின் ஏவல் படையாகச் செயல்பட்டு அரசியல் பழிவாங்கலுக்குத் துணைநிற்குமென்றால், இதுதான் மாற்று அரசியலா? கட்சியின் பெண் நிர்வாகியிடம் பாலியல் தொந்தரவு செய்த இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் மீது பாயாத கைதுநடவடிக்கை, செய்தியாளர்களைத் தாக்கிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் கபில் மீது பாயாத கைது நடவடிக்கை, திருவைகுண்டத்தில் பெண்ணைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வதற்குச் சூத்திரதாரியாகச் செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது பாயாத கைதுநடவடிக்கை, அறவழியில் போராடிய தங்கை கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் ஏழு பேர் மீது பாயுமென்றால், நடப்பது மக்களுக்கான ஆட்சியா?
திராவிடக்கட்சிகள் முந்தைய ஆட்சிக்காலங்களில் செய்த அதே தவறுகளைத்தான் தவெக அரசும் செய்யுமென்றால், இது நல்லாட்சியா? கேடுகெட்ட காட்டாட்சி! அதிகாரத்திமிரிலும், பதவி தரும் மமதையிலும், புகழ்போதையிலும் முதல்வர் விஜய் இன்றைக்கு மனம்போன போக்கில் ஆட்டம் போடுவாரென்றால், இதேபோல ஆட்டம்போட்ட ஆட்சியாளர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்? எனக் கொஞ்சம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளட்டும். ‘நிரந்தர முதல்வரே!’ என உங்கள் கட்சியினர் புகழ்கிறார்கள் என்பதற்காக, இந்த ஆட்சியும், அதிகாரமும் நிலையானது எனும் முடிவுக்கு வந்துவிட்டீர்களா முதல்வர் விஜய் அவர்களே!
உங்கள் அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும் என்னுடைய தம்பி, தங்கைகள் பயந்து ஒதுங்கிவிடுவார்கள் என நினைத்தீர்களா? ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள். வழக்கு இல்லையென்றால், விடியாது கிழக்கு என்று சொல்லித்தான் என்னுடைய பிள்ளைகளை நாளும் வளர்த்திருக்கிறேன். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவுகூட அசைத்துப் பார்த்திட முடியாது. ஐந்து மாதகால ஆட்சியிலேயே ஆயிரத்தெட்டு நிர்வாகச்சீர்கேடுகளும், குளறுபடிகளும், குழப்பங்களும் தலைவிரித்தாடி, ஆட்சி நிர்வாகம் தறிகெட்டுப்போய், சகித்துக் கொள்ள இயலாது மக்கள் வீதிக்கு வந்துப் போராடுகையில், அவற்றைச் சரிசெய்ய முயற்சி எடுக்காத தரங்கெட்ட தவெக அரசு, அரசியல் பழிவாங்கலுக்காகத் தன்னுடைய கவனத்தைச் செலுத்துமென்றால், இந்த ஆட்சியும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை.
பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள தங்கை கார்த்திகா, அவருடைய கணவர் முருக சந்திரகுமார் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன். இல்லையெனில், அதற்கான எதிர்விளைவுகளை உறுதியாகச் சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி


























