என் மீது போடப்பட்டுள்ள வழக்கின் எப்.ஐ.ஆர். நகலைக்கூட கையில் கொடுக்கவில்லை. பொதுவெளியிலும் வெளியிடவில்லை. எங்கிருந்தோ ஒரு போன் வருகிறது. திடீரென ஓடுகிறார்கள். ‘கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போங்கள்’ என்கிறார்கள். விசாரணை நிறைவடைந்தும் வெகுநேரம் சும்மாவே உட்கார வைத்தார்கள்.
- ஆ. ராசா
அரசுக்கு எதெல்லாம் வருவாய் வருமோ அதெல்லாம் இலவசமாக்கிட்டா அப்பறம் எப்படி அரசுக்கு வருவாய் கிடைக்கும்?
- சீமான்
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
- முக ஸ்டாலின்
8 தலித் அமைச்சர்கள் வந்துவிட்டதால் விடிவுகாலம் வந்துவிட்டதாக நான் நம்பல.. இந்த சனாதன கட்டமைப்பு அப்படிப்பட்டது…
- அமைச்சர் வன்னி அரசு
தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பித்த கைதிகள்…
தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்…
ஏற்கனவே புழல் சிறையில் இருந்து கைதிகள் ஓரிருவர் தப்பித்த செய்தி சமீபத்தில் வந்தது… தற்போது தேனியில் 17 பேர்…
சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?…
- மு.க.ஸ்டாலின்
மழைக்காலம் முடியும் வரை யாரும் யாரையும் குறை சொல்வதை விட்டுவிட்டு, களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும்…
– அமைச்சர் ராஜ்மோகன்
ஒன்றிய அரசு மின் பற்றாக்குறை குறித்து சரியாக திட்டமிடாததால் ரூ.46க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ராஜஸ்தான் மாநிலம் வாங்குகிறது…
- அமைச்சர் நிர்மல் குமார்
திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கப்பட்ட “மாவட்டத்திற்கு ஒரு அரசு மாதிரிப்பள்ளி” திட்டம், நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டின் அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களும் அதிக அளவில் சேர்ந்து பயில வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது… இத்திட்டம் சிறப்பான தாக்கத்தை முந்தைய கல்வியாண்டுகளில் ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வியாண்டில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் 1,320 என்ற அளவில் உயர்ந்து இருப்பதை அறிந்து மிகமிக மகிழ்ச்சி அடைகிறோம்…
இந்த நிலை என்றென்றும் தொடர வேண்டும்!
- அன்பில் மகேஸ்
அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைக் கைது செய்துள்ள தவெக அரசுக்கு கடும் கண்டனம்…
- மு.க.ஸ்டாலின்
இதுவரை நாம் யாருமே பார்க்காத அளவுக்கு குழந்தைகள் காணாமல் போகிறார்கள்…காப்பாற்ற வேண்டிய தாய்மாமனே காணவில்லை…
- கனிமொழி
பாலீர்ப்பு, பாலடையாளம் எதுவாகினும்… உணர்வுப்பூர்வமாக அல்லாமல், அறிவியல்பூர்வமாக அணுகுவதே அவசியம்…
#Dorothy

