kalaranjan kanagalingam retweeted
எங்களது பிர.சட்டகம் நூலை பேராசான் ஐயா மணியரசன் வாசித்து முழுமையான ஆதரவு தந்தார். தமிழினப்படுகொலை ஆவணக்கையேடு (Genocide chronicl) உருவாக்கத்தின் போதும் ஐயா காணொளிமூலம் தகவல்களைத்திரட்ட உதவினார்.
புலிப்பண்பாடு நூலும் ஐயாவின் கையால் பெருமெடுப்பில் வெளியிட எண்ணியிருந்த வேளை, திடுநேர்கையாக உடல்நலக்குறைவினால் தளர்ந்துபோயிருந்தார். இதற்கு மேல் ஐயாவிற்குத் தொந்நரவு கொடுக்கக் கூடாது என விலகியிருந்தோம்.
ஆனாலும் புத்தகத்தைத் தன்னிடம் அனுப்புமாறு கோரி, நிழற்படம் எடுத்து தனது ஆதரவைத்தந்து இன்று தஞ்சாவூரில் தனது வீட்டில் வைத்தே புலிப்பண்பாடு நூலை வெளியீடு செய்தார் ஐயா பேராசான் மணியரசன்.
சென்னையில் செயலாளர் கி,வெங்கட்ராமன் வெளியிட, எங்களது அன்புக்குரிய யாப்பு வெளியீடு செந்தில் பெற்றுக்கொண்டார்.
நாளைமுதல் தமிழகமெங்கும் #புலிப்பண்பாடு கிடைக்கும்.
தொடர்புகளுக்கு @YappuV வெளியீடு.
எங்கள் மதிப்புக்குரிய பேராசானுக்கு நன்றி உரித்தாகட்டும் @ulagapathippu
kalaranjan kanagalingam retweeted
பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் ஒன்றுகூடி மாவீரர்களுக்கு விளக்கேற்றினர்.
பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பகுதியில் அமைந்துள்ள தமிழருக்குச் சொந்தமான உலகத் தமிழர் வரலாற்று வளாகத்தில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் தாயகத்தில் அமைந்திருந்த துயிலுமில்லத்தை கண்முன் நிறுத்தியது போன்ற நினைவுகளுடன் நடுகற்கள் நடப்பட்டு அவற்றில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாவீரர்களின் திருவுருவப்படங்கள் பொருத்தப்பட்டு அணிவகுப்பு மரியாதையுடன் தமிழீழத் தேசியக்கொடி எடுத்துவரப்பட்டு
ஏற்றப்பட்டு, தமிழீழத் தேசியத்தலைவரின் 2008 மாவீரர் நாள் உரை ஒலிபரப்பைத் தொடர்ந்து , மாவீரர்களின் உறவுகளால் விளக்கேற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
இதேவேளை பல்லாயிரக்கணக்கான மாவீர்களின் திருவுருவப்படங்கள் மாவீரர் மண்டபத்தில் வைக்கப்பட்டு உறவுகளால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
உலக முற்றத்தில் தமிழீழ விடுதலை வரலாற்றை வெளிப்படுத்தும் உணர்வுடன் கூடிய மிக வலிமையானதொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.
தமிழின விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த விடுதலைப் புலிகளின் தியாகத்தை ,தேசியத்தலைவரின்
அடிபணியாத இலட்சியத்தை புலம்பெயர் தமிழர் தலைமுறைகள் அறிந்து வழிபற்றிக்கொள்ளும் வீரவரலாறுகளின் ஒட்டுமொத்த சாட்சியமாய் இந்நாள் அமைந்திருக்கிறது.
#மாவீரர்நாள்2026
kalaranjan kanagalingam retweeted
புலனாய்வின் கணிதன்!
எங்கள் பொட்டு அம்மானின்
அகவை நாள். ❤️💛
#அகவை64
kalaranjan kanagalingam retweeted
அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்தில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல் !
தென் தமிழீழம் ;-
தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை வணங்கி உறுதிகொள்ளும் புனித நாளான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2026 நவம்பர் 27 தாயக விடுதலைக்காக உயிர்நீர்த்த மாவீரர்களை நினைவேந்தினர்கள் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு துயிலுமில்லத்தில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், பொது மக்கள் என பெருந்திரளானவர்கள் உணர்வுபூர்வமாக ஒன்று திரண்டு உயரிய இலட்சியத்திற்காக தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு நினைவேந்தினார்கள்.
kalaranjan kanagalingam retweeted
தீர்க்கதரிசனத்தின் நிதானமும் - மேடைப் பேச்சின் சலனமும் !
தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் இராஜதந்திரத் தெளிவும் சமகால அரசியல் முரணும்!
வரலாற்றின் போக்கைத் தீர்மானிக்கும் ஒரு மாபெரும் தேசியத் தலைவரின் மேன்மை என்பது, அவர் தனது இனத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கும் சர்வதேச மற்றும் பிராந்திய இராஜதந்திர விவகாரங்களை எவ்வளவு நிதானத்தோடும், தீர்க்கதரிசனத்தோடும் கையாளுகின்றார் என்பதிலேயே தங்கியுள்ளது.
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஆற்றிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நேர்காணலில்,
தமிழக மக்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான தொப்புள்கொடி உறவையும், இந்திய மத்திய அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது விதித்துள்ள தடையின் பின்னணியையும் மிக நுட்பமாகவும், இராஜதந்திர முதிர்ச்சியோடும் பகுப்பாய்வு செய்துள்ளார்.
"தமிழக மக்கள் எப்போதுமே எங்களுடன் மிகவும் அன்பாகவும், எமது போராட்டத்திற்கு ஆதரவாகவுமே இருந்து வருகின்றார்கள்; அந்த மக்கள் எங்களுக்கு ஆதரவு தரக்கூடாது என்பதற்காகவே இந்திய மத்திய அரசாங்கம் எமது அமைப்புக்கு எதிராகத் தடையை ஏற்படுத்தியுள்ளது"
எனத் தலைவர் அவர்கள் மிகத் தெளிவாகவும், நிதானமாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கும் மேலாக, அந்தத் தடையை எதிர்த்துச் சிறை சென்ற தமிழக உறவுகளின் தியாகத்தை நன்றியோடு நினைவுகூர்ந்த தலைவர், இந்திய மக்களையோ அல்லது தமிழக மக்களையோ எதிரிகளாகச் சித்தரிக்காமல், தடையை நீக்கினால் தமிழக மக்கள் எமது போராட்டத்திற்குப் பேருதவியாக இருப்பார்கள் என்ற இராஜதந்திரக் கதவுகளைத் திறந்து வைத்தே உரையாற்றியுள்ளார்.
தலைவர் அவர்களின் இந்த நிதானமான, பொறுப்புணர்வு மிக்க இராஜதந்திர மொழிநடையோடு, சமகாலத்தில் தமிழக அரசியல் மேடைகளில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆற்றி வரும் உரைகளை ஒப்பிட்டு நோக்கும்போது ஆழமான கருத்தியல் முரண் வெளிச்சத்திற்கு வருகின்றது.
தலைவர் அவர்கள் எந்தவொரு இடத்திலும் இந்திய அரசாங்கத்துடனான முரண்பாடுகளைத் தனிமனித வன்மமாகவோ அல்லது இயக்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களைத் தானாகவே ஏற்றுக்கொள்ளும் தற்கொலை வாதமாகவோ ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை; மாறாக, இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்கும், சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்குமான இராஜதந்திர இடைவெளிகளை எப்போதும் பாதுகாத்து வந்தார்.
ஆனால், சீமான் அவர்கள் தமிழகத் தேர்தல் மேடைகளின் கைதட்டல்களுக்காக, இயக்கம் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்காத ராஜீவ் காந்தி கொலைச் சம்பவத்திற்குத் தானாகவே உரிமைகோரிப் பேசுவதும், வரலாற்றுக்குப் புறம்பான கற்பனைக் கதைகளைக் கூறுவதும், "நாங்களெல்லாம் LTTE, திமிராப் போடா" எனப் பேசுவதும், தலைவர் பிரபாகரன் அவர்கள் அன்று கட்டியெழுப்பிய இராஜதந்திரத் தெளிவையும், போரியல் ஒழுக்கத்தையும் நேரடியாகச் சிதைக்கும் செயலாகும்.
தமிழக மண்ணில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு விசாரணைகள் நடைபெறும் முக்கியமான காலகட்டங்களில், உணர்ச்சி அரசியலின் பெயரால் மேடைகளில் பொறுப்பற்ற முறையில் பேசப்படும் வார்த்தைகள், தடையை நீக்குவதற்காகச் சட்ட ரீதியாகப் போராடுவோரின் கைகளைக் கட்டிப்போடுவதோடு, புலிகள் மீதான பயங்கரவாத முத்திரையை நியாயப்படுத்தும் சக்திகளுக்கே துணைபோகின்றன.
தலைவர் பிரபாகரன் அவர்கள் அன்று வெளிப்படுத்திய தீர்க்கதரிசனமும், நிதானமும், இராஜதந்திர முதிர்ச்சியுமே ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கான உண்மையான வழிகாட்டியாகும்; அதனைச் சிதைக்கும் எந்தவொரு மேடைப் பேச்சும் வரலாற்றின் முன் விமர்சனத்திற்கு உள்ளாவதைத் தவிர்க்க முடியாது!
தொல்காப்பியன்
CC : @Seeman4TN @vennilaVT @NaamTamilarOrg @sabas_kris0712 @Saattaidurai @idumbaikarthi @Sunandha_TS @ThevanKaruppan @RatnaKing20 @karikalaseelan @KalaranjanK @VeeranRavanan @AasaiThilipan @priyan23222
kalaranjan kanagalingam retweeted
அருள் விக்னேஷ் கைதா. கூட்டத்தில் இருந்து வந்த குரல்.. மேடையில் பேசிக்கொண்டிருந்த போது சீமான் கொடுத்த ரியாக்ஷன்!
MLA Arul Vignesh | MLA Arrest | MLA Arul Vignesh Arrest | TVK MLA Arrest | Kallakurichi MLA Arrest | Seeman Speech
#Newstamil24x7 #Kallakurichi #MLAArrest
kalaranjan kanagalingam retweeted
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் -2026 Excel teapawt.net/i/broadcasts/2dKkXNAPg…
kalaranjan kanagalingam retweeted
தமிழக மண்ணில்:
பட்டொளி வீசும் தமிழீழத் தேசியக் கொடி!
கடல்கடந்தும் உயர்ந்து பறக்கும் எம் தேசத்தின் ஆன்மா...
"ஏறுது பார் கொடி ஏறுது பார் – தமிழீழத்தின் வேதனை தீர்த்த கொடி!" என்ற எழுச்சிப் பாடல் விண்ணதிர, தமிழகத்தின் செம்மண் பரப்பில் எமது தாயகத்தின் தேசியக் கொடி உயர்ந்து பறக்கும் இந்தக் காட்சி, ஒவ்வொரு ஈழத்தமிழனின் நெஞ்சத்தையும் உணர்வின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கின்றது!
எமது தாயகப் பெருநிலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்கள் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் இரும்புப் பாதங்களால் சிதைக்கப்பட்டு, எமது தேசியக் கொடியை ஏற்றுவதற்கும், வித்துடல்களை நினைவுகூருவதற்கும் சிங்களப் பேரினவாதம் தடை விதித்திருக்கும் இக்காலகட்டத்தில்; தொப்புள்கொடி உறவுகளான தமிழகத் தாய்த்தமிழ் உறவுகள், எமது தேசியக் கொடியை வானுயர ஏற்றி, மலர் தூவி, மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் இக்காட்சி எமது இனத்திற்குப் பெரும் ஆறுதலையும், புதிய நம்பிக்கையையும் அளிக்கின்றது.
வானத்தில் பட்டொளி வீசிப் பறக்கும் அந்தப் புலிக்கொடியில், வல்வெட்டித்துறை முதல் நந்திக்கடல் வரை தமது இன்னுயிரை ஆகுதியாக்கிய பல்லாயிரக்கணக்கான மண்ணின் மைந்தர்களின் மூச்சுக்காற்று கலந்திருக்கின்றது. எல்லைக் கோடுகளும், கடல்களும் எமது நிலப்பரப்பைப் பிரித்திருக்கலாம்; ஆனால், தமிழீழ விடுதலை என்ற ஒற்றை இலட்சியமும், மாவீரர்களின் ஈகமும் உலகத் தமிழினத்தை ஒரே ஆன்மாவாக இணைத்து வைத்திருக்கின்றது என்பதற்கு இக்காட்சியே உயிருள்ள சாட்சியம்!
காலங்கள் உருண்டோடினாலும், எமது தேசத்தின் கொடி ஒருபோதும் தாழாது; எமது மாவீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது!
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய எமது மானமாவீரர்களுக்குச் சிரம் தாழ்த்திய வீர வணக்கங்கள்!
@KalaranjanK @RatnaKing20 @karikalaseelan
kalaranjan kanagalingam retweeted
தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2026 EXCEL
kalaranjan kanagalingam retweeted
#மாவீரர்நாள்2026
The real heroes.... தமிழர்களின் காவல் தெய்வங்கள் 🙏🙏🙏





















