Pinned Tweet
எதைக் கேட்டாலும்,
கஷ்டத்தையே
கொடுக்கிறாய்...
கஷ்டத்தைக் கேட்டால்,
எதைக் கொடுப்பாய்...
கடவுளே😔
Money_தன்🗿 retweeted
" நீ எக்கேடு கெட்டுப்போனால்
எனக்கென்ன?" என்று
உன் முகத்திற்கு நேராய்
சொல்லிவிட்டு வந்தவனும்
நான்தான்
உனக்கு என்ன ஆயிற்றோ என
யார் யாரிடமோ கேட்டு
பரிதவித்துத் திரிபவனும்
நான்தான்
அலை மேல் செல்லும் படகிற்கு
ஒரு கரை சேர்வதற்குள்
ஓராயிரம் தத்தளிப்புகள்
-மனுஷ்ய புத்திரன்
Money_தன்🗿 retweeted
கெஞ்சி கேட்டுதான் கிடைக்கும் என்றால்.. அது கிடைக்காமல் இருப்பதே நல்லது.. !
அன்போ, அக்கறையோ, நேரமோ
Money_தன்🗿 retweeted
போட்டி போல் வைக்கலாமா?
குலுக்கல் முறையில் பரிசு கொடுக்கலாமா?
அல்லது,
புதுமையாக ஒவ்வொருவரின் பெயரையும் தனித்தனியாகப் பதிவிட்டு, அவரவர் பெயருக்கு வரும் லைக்குகளின் எண்ணிக்கையை வைத்து வெற்றியாளரைத் தேர்வு செய்யலாமா?
மக்களே உங்கள் விருப்பமே My விருப்பம் 👇
18%POLL
68%குலுக்கல்
15%LIKE
74 votes • 9 hoursஅவ்வளவு சுலபமாய், போய்விட்டதா...
உன்னோடு,
நான் கொண்ட காதலும்...
அதனால் நாம் கொள்ளும்,
ஊடலும்...
#Money_தன்
1
27
Money_தன்🗿 retweeted
நீயற்ற நான்
எண்ணெய் தீர்ந்து போன அகலில்
தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் திரி..
- யாத்திரி
Money_தன்🗿 retweeted
நாம் சந்திக்கும்போது
பேச ஒன்றுமே இருப்பதில்லை
ஆனால்
நாம் சந்தித்தைப் பற்றிப் பேச
எப்போதும் எவ்வளவோ இருக்கிறது..
- மனுஷ்யபுத்திரன்
Money_தன்🗿 retweeted
கடலுக்கு மட்டுமே
பழக்கப்பட்ட கப்பல்
அதன் அலைகளாலேயே
உடைக்கப்பட்டு மூழ்கடிக்கப்படுகிறது
உரியவரிடத்தில் உடைபடுதல்
மனிதர்களுக்கு மட்டுமே
சொந்தமானது அல்ல
Money_தன்🗿 retweeted
ஸ்கூலில் கையெழுத்துப் போடக் கற்றுக்கொடுத்தாங்க...
ஸ்மார்போனில் எல்லாத்துக்கும் கைரேகை வைக்க வச்சுட்டாங்க!
Money_தன்🗿 retweeted
அடிக்கடி சந்திக்கும் நபரிடம் "நீங்க நலமா" எனும் கேள்விக்கு, ஏன் உனக்கு தெரியாதா என்பதை போன்றே இருக்கிறது அவரின் பதில்..
Money_தன்🗿 retweeted
என்னுடைய முதல் கவிதை தொகுப்பு வெளியாகியுள்ளது
புத்தகம் பெற தொடர்பு கொள்ளவும் ❤️
#கூலு
#tamilbook
Money_தன்🗿 retweeted
உண்மையான நன்மை என்பது
நமக்கு கிடைக்கும் செயலுக்கு அப்பாற்பட்டது.நம்மோடு உண்மையாக இருப்பவர்களிடமும் நாம் பிறருக்கு உண்மையாக இருப்பதிலும் உண்மையான நன்மை என்பது இருக்கிறது.
Money_தன்🗿 retweeted
நாளைக்கு என்று
தள்ளி வைப்பதை
இருமுறை ஆலோசிக்க வைப்பதும்
இன்றென்ன அவசரம் எனத்
தள்ளி வைக்கச் சொல்வதும்
அவரவர் காணும்
கால தரிசனத்தில்
இருக்கிறது
Money_தன்🗿 retweeted
மாலை
எல்லாவற்றையும்
அதன் இடத்துக்குத்
திருப்பி அனுப்புகிறது
கடைசி ஷிப்டில்
உதிக்கும் சூரியனைத்
தவிர
Money_தன்🗿 retweeted
திரும்பாத பறவைகளாய்ச்
சில கனவுகள்
திறந்தே இருக்கின்றன
ஜன்னல்கள்
எட்டிப் பார்த்தாலும் பார்க்கலாம்
அந்த வானம்
யார் கண்டது?
உதிர்வது,
இலைகளின் தவறல்ல...
விட்டு விடுவது,
கிளைகளின் இயல்பு...
#Money_தன்
Money_தன்🗿 retweeted
ஆழ்கடலின் அடியிலிருந்து
குளிரில் நடுக்கியபடி
எழுந்தது நிலவு,
ஓடிச்சென்று
போர்த்திக்கொண்டது மேகம்,
இருளில் மூழ்கியது முற்றம்!


















