Pinned Tweet
ஏகேங்குற ஒரு நடிகன கிண்டல் பண்ணதுக்காக பல ஐடிக்கள அபூஸ் பண்ணிருக்கேன் நல்லா பேசுனவங்களோட சண்டை போட்ருக்கேன் சம்பந்தப்பட்ட ஐடிகள் பாக்குதோ இல்லையோ எல்லாரும் என்னைய மன்னிச்சுருங்க 🙏
473
Mr. வேந்தன் retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்!
@CMOTamilnadu @TVKVijayHQ
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தனக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா அவர்கள் புகார் தெரிவித்திருப்பது தறிகெட்டு நிற்கும் தவெக ஆட்சியின் மோசமான நிலைக்கான சான்றாகும்.
ஒரு மாவட்டத்தின் நிர்வாகத் தலைவராக இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கே தவெகவின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை; அதுவும் தவெகவின் சட்டமன்ற உறுப்பினரே அத்துமீறி நடந்துகொள்ள முனைகிறார் என்றால், எளிய மக்களுக்கு இந்த ஆட்சியில் என்ன பாதுகாப்பு இருக்கும்?
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் பொறுத்துக்கொள்ளாத (Zero Tolerance) கொள்கையைக் கடைப்பிடிப்போம் என்று மேடைகளில் வீராவேசமாக முழங்கிய முதல்வர் விஜய் அவர்கள், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்காது காப்பாற்றிவிட முனைந்தது எதற்காக? அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அமைச்சர்களைக் கொண்டு பேச வைத்தது ஏன்? அதிமுக்கியத்துவம் வாய்ந்த இவ்விவகாரத்தில் இப்போதுவரை முதல்வர் விஜய் ஏன் வாய்திறக்கவில்லை? அமைதியாக இருந்து எதை சாதிக்க நினைக்கிறார்?
கடந்த சூலை 31 அன்றே இந்த விவகாரம் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு புகார் தெரிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், 115 நாட்களாக முதல்வர் விஜய் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? புகார் தெரிவிக்கப்பட்டப் பிறகும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசுத்தரப்பு எதற்காக சப்பைக்கட்டு கட்டியது? இது மோசடித்தனம் இல்லையா? குற்றவாளியைக் காப்பாற்றும் விதத்திலான முதல்வர் விஜய்யின் நிர்வாக அணுகுமுறை இழிவானது இல்லையா? கடும் கண்டனங்கள்!
பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி, மரியாதையுடன் வாழும் சூழலை உருவாக்குவதே அரசின் முதன்மை நோக்கம் என்று கூறினீர்களே முதல்வரே! ஒரு மாவட்ட ஆட்சியரே, ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் தெரிவித்து, நடவடிக்கை கோரி, நீதிமன்றத்தில் புகார்கூற வேண்டிய நிலை என்றால், எளிய பெண்கள் எந்த நம்பிக்கையில் காவல்துறையை அணுகுவார்கள்? பெண்களுக்கு அண்ணனாகத் துணை நிற்பேன் என்றும், இரு பெண்களைக் கொள்கைத் தலைவர்களாக ஏற்றிருக்கிறோம் என்றும் மேடைதோறும் பேசிய முதல்வர் விஜய், இந்தப் புகார் அரசின் கவனத்துக்கு வந்தபோது ஏன் மௌனம் காத்தார்? நடவடிக்கை எடுக்க மறுத்தார்? தனிக்கட்சிப் பெரும்பான்மை இல்லாத தனது ஆட்சியைத் தக்க வைக்க எந்த எல்லைக்கும் முதல்வர் விஜய் செல்வாரேன்றால், இது மாற்றமா? கொடும் துர்நாற்றமா?
தாராபுரம் இடைத்தேர்தல் வழக்கில், என்னுடைய தங்கை கார்த்திகாவைக் கைது செய்ததில் காட்டிய அவசரமும், பயணத்தின் இடையே தம்பி இசை மதிவாணனைக் கைது செய்ததில் காட்டிய முனைப்பும், அரசை விமர்சித்துப் பேசிய தம்பி சாட்டை துரைமுருகன் மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவுசெய்ததில் காட்டிய வேகமும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீதான இந்தப் புகாரில் எங்கே போனது?
தாராபுரம் இடைத்தேர்தலில் சத்தியபாமா உருவக்கேலிக்கு ஆளானபோது கண்டனம் தெரிவித்த முதல்வர், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவின் புகார் குறித்து ஏன் வாய் திறக்கவில்லை? மாண்புமிகு நீதிபதி விக்டோரியா கௌரி அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் இவ்விவகாரம் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவர் மீது தவெகவினர் பொழிந்த ஆபாச வசைகளையும், கீழ்த்தரமான விமர்சனங்களையும் முதல்வர் கண்டிக்காதது ஏன்? பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று தமது கட்சியினரிடம் சொல்லக்கூட முதல்வருக்குத் தயக்கமா?
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட சம்பவமே நடைபெறவில்லை என்று ஊடகச் சந்திப்பில் மறுத்த அமைச்சர் நிர்மல்குமார், எந்த அடிப்படையில் அவ்வாறு கூறினார்? புகாரை மூடி மறைக்கத் துணைபோன அமைச்சர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தேசிய மகளிர் ஆணையம் உள்நுழைந்து, உயர் நீதிமன்றம் தலையிட்டு, மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கும் வரை அரசு காத்திருந்தது ஏன்? தேசிய மகளிர் ஆணையமும், சென்னை உயர் நீதிமன்றமும் தலையிடும் நிலை வரும்வரை அரசின் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை இந்த விவகாரத்தில் என்ன செய்தது? பெண்கள் துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்று சொல்லும் அரசே, ஒரு பெண் மாவட்ட ஆட்சியரின் புகாருக்குப் பதிலளிக்க இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டது பேரவலம் இல்லையா?
ஆகவே, சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமென தவெக அரசை நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Mr. வேந்தன் retweeted
எல்லா விஷயங்களையும் அதிமுக தான் சட்ட போராட்டம் நடத்தி வெளிய கொண்டு வந்துருக்கு போல.. @arivalayam @DMKITwing அன்பில் மகேஷ் காப்பத்த தான் முழு மூச்சா இறங்குவீங்கனா கம்முனு கட்சிய கலச்சிருங்க..
Mr. வேந்தன் retweeted
#WATCH | "அப்படி ஒரு சம்பவமே நடக்கலனு சொல்லி குற்றவாளிக்கு துணை போன அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.." -இன்பதுரை எம்.பி., வழக்கறிஞர்
#SunNews | #ArulVignesh | #TVK
Mr. வேந்தன் retweeted
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து IAS அதிகாரி கவிதா ராமுவின் பதிவு !
சம்பந்தப்பட்ட அதிகாரி தற்போது எழுத்துப்பூர்வமான புகாரை அளித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசுவதில் எந்தத் தவறும் இருப்பதாக நான் கருதவில்லை.
பத்மஜா மற்றும் அவரது கணவர் அப்துல் ஆகிய இருவருக்கும் இது மிகவும் வேதனையான மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்திய காலகட்டமாக இருந்தது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் குறித்து பல்வேறு கற்பனையான தகவல்களும், தங்களுக்குத் தோன்றிய விதமான கதைகளும் பரப்பப்படத் தொடங்கியபோது அவர்களின் மனவேதனை மேலும் அதிகரித்தது.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி ஒருவரின் முறையற்ற வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் நடத்தைகள் தொடர்பான சம்பவம் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இருப்பினும், சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட பிறகுதான் நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த விவகாரம் தெரியவந்தது.
உண்மையில், இந்த மாதம் 11ஆம் தேதி பத்மஜாவுடன் நான் விரிவான உரையாடல் ஒன்றை நடத்தினேன். அப்போது அவருக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவித்தோம்.
இந்த விவகாரம் உயர் மட்டத்தில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதாகவும், உரிய தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், சில சமூக வலைதளப் பக்கங்கள் இந்தச் சம்பவத்தைப் பற்றி எதுவுமே நடக்காதது போல சித்தரித்து வந்த விதம் அவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியிருந்தது.
உண்மையில், அவர் வேறு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் கோரப் போகிறாரா என்று நான் சந்தேகப்பட்டு, அதுகுறித்து அவரிடம் கேட்டேன்.
அதற்கு பத்மஜா, தலைமைச் செயலாளரே முன்பு வேறு மாவட்டத்திற்கு மாறுவது குறித்து பரிசீலிக்குமாறு தன்னிடம் ஆலோசனை தெரிவித்திருந்ததாகக் கூறினார். இருப்பினும், தான் கள்ளக்குறிச்சியிலேயே தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகத் தெளிவாகத் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.
என்ன ஒரு துணிச்சலான பெண்!
மூத்த அதிகாரிகள், தலைமைச் செயலாளர் (CS) உள்ளிட்டோர் புகார் அளிப்பதே இதற்கான ஒரு பயனுள்ள தீர்வாக இருக்கும் என்று அறிவுறுத்தியபோதும்கூட, ஆரம்பத்தில் அவர் புகார் அளிக்க விரும்பவில்லை.
சக அதிகாரிகளாகிய நாங்கள் ஏன் இந்த விவகாரத்தை முன்பே கையில் எடுக்கவில்லை என்று எனக்குச் செய்தி அனுப்பிய அனைவருக்கும் ஒன்றைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
நாங்களும் இந்த விவகாரத்தை முன்பே கையில் எடுக்க விரும்பினோம். இருப்பினும், பாதிக்கப்பட்ட எங்களுடைய சக பெண் அதிகாரியின் ஒப்புதலும் விருப்பமும் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கருதினோம்.
அவருடைய கண்ணியத்திற்கும் விருப்பத்திற்கும் நாங்கள் முதலிடம் அளிக்க வேண்டியிருந்தது.
இத்தகைய சூழ்நிலையில் ஒரு பெண் எந்த அளவிற்கு மனரீதியான வேதனைகளையும் பாதிப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியும்.
இந்தக் கடினமான அத்தியாயத்தைப் பத்மஜா கடந்து சென்று, தனக்குரிய மன அமைதியையும் மன உறுதியையும் மீண்டும் பெற்று, தனது வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக விரும்புகிறேன்.
அதற்கு அவர் முழுத் தகுதியானவர்
கவிதா ராமு ஐ.ஏ.எஸ் .
Mr. வேந்தன் retweeted
உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா?
தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?
போடாத கமெண்டுக்காக, பேராசிரியரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்து அதிகாலையில் கடத்திச் செல்லத் தெரிந்த காவல்துறைக்கு, முதலமைச்சர் விஜய் அவர்களின் பொடனிக்குப் பின்னாலேயே இருந்துகொண்டு தவறிழைத்த MLA-வைக் கைது செய்யத் தெரியவில்லையா?
கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும்.
மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார். அந்த தைரியத்தில்தான் ஒட்டுமொத்த மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் அதிகாரியிடமே எல்லை மீறியிருக்கிறார் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்.
'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்த வழக்கிலாவது உறுதியான நடவடிக்கை எடுத்தால்தான் இப்படியான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முடியும்.
நான்கு மாதகாலமாக ஒரு குற்றவாளியைப் பாதுகாக்க எல்லா வழிகளையும் பயன்படுத்திய மாநில அரசு - இப்படிப்பட்ட MLA-வை அழைத்து “தீபாவளி பரிசு” கொடுத்த முதலமைச்சரின் தலைமையில் உள்ள மாநில அரசு இனி இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது. எனவே, மாநில அரசு தாமாகவே இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும்.
சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனம் குறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித்த பின்பும் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைத்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியருக்கு அழுத்தம் தந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.
#TVKFails #Arrest_ArulVignesh
ஒரு பத்துபேரு இவ மூஞ்சில காரி துப்புங்கடா
மறுபடியும் சொல்றோம்.. விசாரணை போகுது.. தவறு அதிகாரபூர்வமா ஆதாரத்தோட உறுதி செய்யப்பட்டா முதல்வர் கண்டிப்பா கடுமையான நடவடிக்கை எடுப்பார்.. திமுக மாறி பொம்பள பொறுக்கிங்கள காப்பாத்த மாட்டார்!
@TVKVijayHQ @CMOTamilnadu
12
Winppadiyar
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.
மாற்றிப் பேசி,
உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு,
தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர்,
“MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின்
மாநிலத் தலைவர்,
என வெளியில் தெரிந்தே
இத்தனை அழுத்தங்கள்,
இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார்,
கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர்.
ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும்
கொடுமையை மறைக்க
எத்தனை பொய்கள்?
எவ்வளவு உருட்டுகள்?
இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?
@AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது.
அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது
ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்?
All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்?
அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது?
நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற
மனநிலை தானே இது?
மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?
இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu?
“நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற
@actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள்.
இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்!
இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!
எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
Mr. வேந்தன் retweeted
தவெக குதிரைபேர வழக்கு,
இடைத்தேர்தலுக்கு எதிரான வழக்கு,
கள்ளக்குறிச்சி எம்எல்ஏவிற்கு எதிரான வழக்கு என தொடர்ந்து தவெக அரசை நீதிமன்றத்தில் Expose செய்து வருகிறது அதிமுக.
சமூக ஊடகங்களில் அதிமுக ஐடிவிங்கும், நீதிமன்றங்களில் அதிமுக வழக்கறிஞர் பிரிவும் தவெகவை சிறப்பாக எதிர்கொள்கிறார்கள்.
வாழ்த்துகள்.
Mr. வேந்தன் retweeted
தவெக அரசு -
எல்லாவகையிலும் உண்மையே பேச வராத - உறுதிப்பாடு இல்லாத- நேர்மையற்ற அரசு.
இன்று மாலை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், சர்ச்சைக்குரிய இடத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்றுவோம் என பொய் சொல்லியிருக்கிறது. பொய் சொன்னவர் மதுரை கலெக்டர் சார்பாக ஆஜரான அரசு வழக்கறிஞர். நாளை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை கலெக்டர்தான் ஆஜராக நேரிடும்.
வரலாற்றில் பதிந்திருக்கிற We will face the Consequences - என்பது ஒரு அரசின் உறுதிப்பாடுமிக்க வரிகள். ஆனால் தவெக அரசு சொன்னது பொய். செய்தது கோழைத்தனமான செயல்.
'சர்ச்சைக்குரிய தூண் தீபத்தூண் இல்லை. நில அளவைக்கல்தான். உச்சநீதிமன்றத்திடம் தமிழ்நாடு அரசின் முடிவை தெரிவிப்போம்' என்பதே ஒரு அரசின் உறுதிப்பாடாக இருக்க முடியும். அந்த உறுதிப்பாடு தவெக அரசின் எந்த எல்லையிலும் இல்லை.
கள்ளக்குறிச்சி கலெக்டர் செய்தி திசைதிருப்பலுக்காக
மதுரை கலெக்டரை கூண்டில் ஏற்றியிருக்கிறது தவெக.
நீதிமன்றத்தில் பொய் சொல்லிக்கொள்ளலாம் என்கிற தவெக அரசின் இதே உத்திதான், ஆபாச செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ மீது கள்ளக்குறிச்சி கலெக்டர் புகாரே கொடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் பகிரங்கமாக சொன்னது.
மூன்று மாதங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி கலெக்டர் கொடுத்த புகாரை முதலமைச்சர், தலைமைச்செயலாளர், அமைச்சர்கள் ராஜ்மோகன், நிர்மல்குமார் அத்தனை பேரும் கூட்டாக சேர்த்து மக்கள் மன்றத்தில் சொன்ன பொய் 'அப்படி ஒரு சம்பவம் நிகழவே இல்லை'என்று.
முதலமைச்சரின் ஆலோசகர்களுக்கான அரசாணையை மறைத்து வைத்து இப்போதுவரை வெளியிட மறுப்பதும் நேர்மையற்ற செயல். அந்த செயலையும் அதிகாரிகளை வைத்தே செய்யவைக்கிறார்கள்.
அதிமுக வழக்கு தொடராவிட்டால் விஎஸ் பாபு உடல் இன்னும் எப்படி ஊதிப் போயிருக்கும் என்பது இங்குள்ள மருத்துவர்களுக்கு தெரியாதா? பிற்பகல் 02:24க்கு இறந்தவரின் உடலா அது? கேக் கொடுக்கும் நிகழ்வு முடியும்வரை கொளத்தூர் வாக்காளர்களுக்கு சொன்ன பொய் அது.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஒட்டுநர் பாலகிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டார் என பொய் சொல்லி, அதற்கு ஆதாரமாக எடிட் செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை வெளியிட்டனர். இப்போது மதுரை டிஎஸ்பி இறந்தவரின் மனைவியிடம் 3 லட்ச ரூபாய் தருவதாக பேரம் பேசியிருக்கிறார். இது காவல்துறை சொன்ன பொய்.
யூனிட் 47 ரூபாய் மின்சாரக் கொள்முதல், பாட்டிலுக்கு 20 ரூபாய் தொடங்கி, அண்டை மாநில முதல்வர்கள் சந்திப்பு, முதலீட்டாளர்கள் மாநாடு வரை தங்களது ஆட்சி நீட்டிப்பிற்காக, அரசியல் லாபத்துக்காக நீதிமன்றங்கள், மக்கள் மன்றங்கள், ஊடகம் என எல்லா தரப்பிலும் நேர்மையற்ற அணுகுமுறை, உறுதிப்பாடு இல்லாத, கொள்கை தேவையில்லாத இந்த அரசின் எல்லா செயல்பாடும் கேள்விக்குள்ளாக்க வேண்டியது. சந்தேகிக்கப்பட வேண்டியது.
அதிகாரிகளை பகடைக்காயாக்கி நேர்மையற்ற வழியில் எல்லாவற்றையும் அணுகும் இந்த அரசின் எந்த ஒரு முடிவுக்கு பின்னாலும் ஒருபோதும் கொள்கையும் லட்சியமும் இல்லை. இல்லவே இல்லை.
தொட்டதெல்லாம் பொய்.
தொட்டதற்கெல்லாம் பொய்.
தொட்டதே பொய்.
தொடாததும் பொய்.
இந்த அரசு யாரிடம் சொல்வது பொய்? யாரிடம் சொல்வது உண்மை ? என்று தெரியும் வரை ஒரு துளி Transparency இல்லாத, ஒரு அடி Accountability இல்லாத, தவெக அரசின் எந்தவொரு நிகழ்விற்கும் பாராட்டுபத்திரம் எழுத தயாராய் இல்லை.
Mr. வேந்தன் retweeted
Replying to @Rajan_0fficial
என்ன நற்பெயர் இருக்கு nu அது கெடும் nu vera பயப்படுற
Mr. வேந்தன் retweeted
டேய் இவன்டா @ramk8060
அப்பழுக்கற்றவர்கள் நாங்கள் புனிதர்கள் நாங்கள் என்பது போல திமுகவினர் பேசி வருவது தான் வேடிக்கையாகவும் சிரிப்பாகவும் இருக்கிறது 😂
மக்களே நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன் நமது ஆட்சியில் தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை பாயும் ஆனால் திமுக ஆட்சியில் குழந்தைகளை நாசம் செய்த ஜெம் வீரமணியை காப்பாற்றி இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள் 🙏
பெண்கள் பாதுகாப்பு பற்றியோ சட்டம் ஒழுங்கு பற்றியோ பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி அருகதை இல்லை நான் மீண்டும் சொல்கிறேன் திமுக ஒரு கொடிய தீய சக்தி.
Mr. வேந்தன் retweeted
தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகச் செய்திகள் வெளியானபோதே, இதுகுறித்து விசாரித்து, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன்.
அன்று என்னையும், பிற அரசியல் தலைவர்களையும், தி.மு.க.வையும் கேள்வி கேட்டவர்களும், பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசுவதைக்கூட அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டியவர்களும் இன்று என்ன சொல்லப் போகிறார்கள்?
ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராகத் துணிச்சலுடன் காவல்துறையில் புகார் அளித்து, பணியிடங்களில் அத்துமீறல்களைச் சகித்துக்கொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கும் முன்னுதாரணமாகத் திகழும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை மனதாரப் பாராட்டுகிறேன்.
இத்தனை நாட்களாகியும் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காத முதலமைச்சர் @TVKVijayHQ , இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது பெண்களின் பாதுகாப்பைவிட, இத்தகைய கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தனது கட்சிக்காரரைப் பாதுகாப்பதுதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டிலேயே தொடர்வாரா?
தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். இப்போதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?

























